Tuesday, June 17, 2025
No menu items!
HomeTamil Nadu Job Vacancyரிசர்வ் வங்கியில் வேலை வாய்ப்பு: மாதம் ₹80,000 சம்பளத்துடன் சிறந்த அறிய வாய்ப்பு!

ரிசர்வ் வங்கியில் வேலை வாய்ப்பு: மாதம் ₹80,000 சம்பளத்துடன் சிறந்த அறிய வாய்ப்பு!

சென்னை: நாட்டின் கருவூலமாகச் செயல்படும் ரிசர்வ் வங்கியில் ஜூனியர் இன்ஜினியர் (சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிப்ளமோ அல்லது இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு இந்த வேலை, சிறந்த வாய்ப்பாக உள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்கள் மாதம் ₹82,236 வரை சம்பளம் பெறுவார்கள்.

காலிப்பணியிடங்கள்:

  • ஜூனியர் இன்ஜினியர் (சிவில்): 7
  • ஜூனியர் இன்ஜினியர் (எலக்ட்ரிக்கல்): 4

கல்வி தகுதி:

  • சிவில்/எலக்ட்ரிக்கல் டிப்ளமோ: குறைந்தது 3 ஆண்டுகள் படிப்பு (அல்லது)
  • இன்ஜினியரிங் டிகிரி: குறைந்த பட்சம் 55% மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.
  • அனுபவம்: டிப்ளமோ மாணவர்களுக்கு 2 ஆண்டுகள், டிகிரி மாணவர்களுக்கு 1 ஆண்டு பணி அனுபவம் தேவை.

வயது வரம்பு:

  • 20 முதல் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
  • அரசு விதிமுறைகள் படி வயது தளர்வுகள் வழங்கப்படும் (எஸ்சி/எஸ்டி: 5 ஆண்டு, ஓபிசி: 3 ஆண்டு, மாற்றுத்திறனாளிகள்: 10 ஆண்டு).

சம்பளம்:
மாதம் ₹82,236 வரை.

தேர்வுமுறை:

  • ஆன்லைன் எழுத்து தேர்வு
  • மொழித்தேர்வு
    தேர்வுகள் முக்கிய நகரங்களில் நடத்தப்படும். தமிழ்நாட்டில் சென்னையில் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
விண்ணப்பதாரர்கள் 30.12.2024 முதல் 20.01.2025 வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்:

  • சாதாரண பிரிவினர்: ₹450
  • எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்: ₹50

விண்ணப்பிக்க:
அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://opportunities.rbi.org.in மூலம் ஆன்லைன் விண்ணப்பிக்கலாம்.

இந்த நேரத்தை தவற விடாதீர்கள்! உங்களுடைய தகுதிகளும், ஆர்வமும் இந்த வாய்ப்புடன் இணைந்தால், உங்கள் கனவு வேலை நிச்சயம் கிடைக்கும்!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments