Sunday, June 15, 2025
No menu items!
HomeTamil Nadu Job Vacancyடிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.75,000 ஜாயினிங் போனஸ்! விப்ரோ வழங்கும் அல்டிமேட் வேலை வாய்ப்பு!

டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.75,000 ஜாயினிங் போனஸ்! விப்ரோ வழங்கும் அல்டிமேட் வேலை வாய்ப்பு!

சென்னை: இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ டெக்னாலஜிஸில் (Wipro Technologies) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிப்ளமோ முடித்தவர்கள் மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஜனவரி 31 இரவு 11:59 மணி கடைசி தேதியாகும். இதற்கான தேர்வில் வெற்றி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு வேலை சேரும்போதே ரூ.75,000 ஜாயினிங் போனஸ் வழங்கப்படும். மேலும், பிடெக் படிப்பையும் இலவசமாக முடிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும்!

விப்ரோவில் வழங்கப்படும் வாய்ப்பு: விப்ரோவின் “School of IT Infrastructure Management” பிரிவில் பணியாற்ற ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தகுதிகள்:

  • 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு முடித்து, டிப்ளமோ படிப்பை 50% அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்ணுடன் முடித்திருக்க வேண்டும்.
  • 2023, 2024 அல்லது 2025ம் ஆண்டில் டிப்ளமோ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
  • டிப்ளமோவை முழுநேர கல்லூரி முறையில் முடித்தவர்களாக இருக்க வேண்டும்.
  • கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன் போன்ற தொடர்புடைய பிரிவுகளில் டிப்ளமோ படித்தவர்களுக்கு முன்னுரிமை.
  • கணிதம் பாடமாக இருப்பது அவசியம் (பிசினஸ் அல்லது அப்ளைட் கணிதம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது).

சம்பள மற்றும் பயிற்சி விவரங்கள்:

  • முதல் ஆண்டு: மாதம் ரூ.12,400
  • இரண்டாம் ஆண்டு: மாதம் ரூ.15,488
  • மூன்றாம் ஆண்டு: மாதம் ரூ.17,553
  • நான்காம் ஆண்டு: மாதம் ரூ.19,918
  • பணியில் சேரும்போதே ரூ.75,000 போனஸ் வழங்கப்படும்.

பிடெக் படிப்பு இலவசமாக:
விப்ரோவின் உதவியுடன் பிடெக் படிப்பை முடிக்க, முழுமையான செலவுகளும் நிறுவனத்தால் ஏற்கப்படும். பணியுடன் படிப்பு என்ற இரட்டை பயனை பெறும் அரிய வாய்ப்பு!

விண்ணப்ப செயல்முறை:

  1. ஆன்லைன் அசஸ்மென்ட் (80 நிமிடங்கள்): Verbal, Analytical, Quantitative, Written Communication ஆகியவற்றில் தேர்வு.
  2. Bussiness Discussion
  3. HR Discussion
  4. Free Skill Agreement

சர்வீஸ் அக்ரிமென்ட்:
இந்த வேலைக்கு தேர்வாகும் நபர்கள் 48 மாதங்கள் (4 ஆண்டுகள்) விப்ரோவில் பணியாற்ற வேண்டும். இந்த காலத்திற்கு முந்தி வேலை விட்டு சென்றால் தண்டமாக தொகை செலுத்த வேண்டியிருக்கும்.

விண்ணப்பிக்க நினைக்கும்வர்கள் உடனே செயல்படுங்கள்!
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, விப்ரோவில் உங்கள் கேரியரை உயர்த்துங்கள். மேலும் விபரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க, விப்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடர்பு கொள்ளுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments