சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபலமான லயோலா கல்லூரியில் 40 பேராசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
அலுவலக உதவியாளர், டைப்பிஸ்ட், ரெக்கார்டு கிளர்க், தூய்மை பணியாளர் போன்ற பல்வேறு பதவிகள் உள்ளன. பத்தாம் வகுப்பு அல்லது எட்டாம் வகுப்பு கல்வி தகுதியுடன் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் விவரம்
- டைப்பிஸ்ட்: 02
- ஆய்வக உதவியாளர்: 09
- ரெக்கார்டு கிளர்க்: 03
- அலுவலக உதவியாளர்: 08
- தூய்மை பணியாளர்: 06
- வாட்ச்மேன்: 02
- வாட்டர்மேன்: 02
- தோட்ட பராமரிப்பாளர்: 02
- Scavenger: 02
- மார்க்கர்: 03
- ஸ்டோர் கீப்பர்: 01
கல்வி தகுதி
- டைப்பிஸ்ட்: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் டைப்பிங்கில் நிபுணத்துவம்.
- ஆய்வக உதவியாளர், ரெக்கார்டு கிளர்க்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி.
- மற்ற பணியிடங்கள்: எட்டாம் வகுப்பு தேர்ச்சி.
வயது வரம்பு
- பொதுப் பிரிவு: அதிகபட்சம் 30 வயது.
- எஸ்.சி./எஸ்.டி.: 35 வயது வரை.
- பிசி/எம்பிசி: 32 வயது வரை.
தேர்வு முறை
விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், தங்கள் பயோடேட்டாவை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்:
The Secretary & Correspondent, Loyola College, Chennai – 600 034.
அல்லது secretary@loyolacollege.edu என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
விண்ணப்பிக்க தொடங்கிய தேதி: 24.01.2025
கடைசி தேதி: 02.02.2025
மேலும் விவரங்களுக்கு: https://www.loyolacollege.edu/
இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் உடனே விண்ணப்பிக்கவும்!