2024ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட செலிபிரிட்டி யார்? பவன் கல்யாண் அடுத்த இடத்தில்!

0
41
breaking tamil news website
2024ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியலில் பவன் கல்யாண், காட் வில்லியம்ஸ், சனா கான் மற்றும் நிம்ரத் கவுர் ஆகியோர் முன்னணி இடத்தில் உள்ளனர்.

2024ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களை பற்றிய விவரம் வெளியாகியுள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த 3 நடிகர்கள், நடிகைகள் டாப் 8 பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். ஆனால் தமிழ்நாட்டை சேர்ந்த யாரும் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.

2024 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட செலிபிரிட்டிகளின் பட்டியலில் அமெரிக்கர் காட் வில்லியம்ஸ் முதலிடத்தில் இருக்கிறார். ஸ்டாண்ட் அப் காமெடியனாக பிரபலமான காட் வில்லியம்ஸ், உலகின் பல நாடுகளில் ரசிகர்கள் பெருகியதால், அவர் கூகுளில் அதிகம் தேடப்பட்டார்.

இரண்டாம் இடத்தில் பவன் கல்யாண், ஆந்திர துணை முதல்வர் மற்றும் தெலுங்கு நடிகர், 2024ஆம் ஆண்டில் மிகச்சிறந்த ஆண்டாக திகழ்ந்தார். அவர் ஆந்திர சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, துணை முதல்வராக பதவி வகிக்கத் தொடங்கினார். மேலும், திருப்பதி கோவிலுக்கு சென்றபோது, மாட்டு கொழுப்பு கலந்த குற்றச்சாட்டில் அவர் தெரிவித்த கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தின. இதன் விளைவாக, அவர் கூகுளில் அதிகம் தேடியவர்கள் பட்டியலில் இடம் பெற்றார்.

இதேபோல், பட்டியலில் 3வது இடத்தில் அமெரிக்கா நடிகர் ஆடம் ப்ரோடி, 4வது இடத்தில் இங்கிலாந்து நடிகை எல்லா பர்னெல், 5வது இடத்தில் இந்திய நடிகை சனா கான், 6வது மற்றும் 7வது இடங்களில் அமெரிக்க நடிகர்கள் கீரன் கல்கின் மற்றும் டெரன்ஸ் ஹோவர்ட், 8வது இடத்தில் இந்திய நடிகை நிம்ரத் கவுர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த பட்டியல் 2024ஆம் ஆண்டின் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நடிகர்கள் மற்றும் நடிகைகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here