Saturday, April 19, 2025
No menu items!
HomeState Gov Jobsமதுரையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக வேலைவாய்ப்பு – உடனே அப்ளை செய்யுங்கள்!

மதுரையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக வேலைவாய்ப்பு – உடனே அப்ளை செய்யுங்கள்!

மதுரை மண்டலத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், நெல் கொள்முதல் பருவகால பணிக்காக பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள்வரை விண்ணப்பிக்கலாம். மொத்தம் 450 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதன் மூலம் அதிகமானவர்களுக்கு அரசு சார்ந்த வேலை வாய்ப்பு கிடைக்கும்.

பணியிட விவரங்களின்படி, சீசனல் பில் கிளர்க் – 150, சீசனல் ஹெல்பர் – 150, சீசனல் வாட்ச்மேன் – 150 என மொத்தம் 450 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு குறிப்பிடப்பட்டுள்ளது. பில் கிளர்க் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அறிவியல், வேளாண்மை, என்ஜினியரிங் போன்ற பாடப்பிரிவுகளில் டிகிரி முடித்திருக்க வேண்டும். ஹெல்பர் பணிக்கு +2 தேர்ச்சி இருந்தால் போதும். வாட்ச்மேன் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

  • பில் கிளர்க் – 18 முதல் 37 வயது வரை
  • ஹெல்பர் – 18 முதல் 34 வயது வரை
  • வாட்ச்மேன் – 18 முதல் 32 வயது வரை

சம்பள விவரங்கள்

  • பில் கிளர்க் – ₹5,285 + DA
  • ஹெல்பர் – ₹5,218 + DA
  • வாட்ச்மேன் – ₹5,218 + DA

தேர்வு முறை
விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இதில் பெறும் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு இறுதி தேர்வு நடைபெறும். நேர்காணலின் மூலம் தேர்வு செய்யப்படும் இப்பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
துணை ஆட்சியர் / மண்டல மேலாளர்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,
லெவல் 4 பில்டிங், 2-வது தளம்,
BSNL வளாகம்,
தல்லாகுளம்,
மதுரை – 625 002.

கடைசி தேதி: 28.02.2025, மாலை 5:00 PM.

இந்த வாய்ப்பை தவறவிடாமல், தேவையான தகுதிகள் உள்ளவராக இருந்தால் உடனே விண்ணப்பிக்கவும்!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments