கோவை: கோவையில் செயல்பட்டு வரும் காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் ப்ராசஸ் எக்ஸிக்கியூட்டிவ் – டேட்டா (Process Executive – Data) பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான தகுதி மிகவும் எளிமையானது. MS Excel அறிவு கொண்டால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
தமிழகத்தில் செயல்படும் பல ஐடி நிறுவனங்களில் காக்னிசண்ட் முக்கியமானது. இது சென்னை மற்றும் கோவையில் செயல்பட்டு வருகிறது. தற்போது, கோவையில் உள்ள காக்னிசண்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்:
காக்னிசண்ட் நிறுவனத்தில் ப்ராசஸ் எக்ஸிக்கியூட்டிவ் – டேட்டா பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் MS Excel, குறிப்பாக அட்வான்ஸ்ட் ஃபங்ஷன்கள் மற்றும் டேட்டா அனலிசிஸ் தொடர்பான நுட்பங்களை அறிந்திருக்க வேண்டும். மேலும், குறைந்தபட்சம் 1 ஆண்டு முதல் அதிகபட்சமாக 2 ஆண்டுகள் வரை பணி அனுபவம் அவசியம்.
தகுதி மற்றும் திறன்கள்:
- அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ்
- பிரச்சனைகளை தீர்க்கும் திறன்
- சிறந்த கம்யூனிகேஷன் திறன்
- கேலாபிரேஷன் ஸ்கில்ஸ்
- கன்ச்யூமர் லென்டிங் கார்ட்ஸ் மற்றும் பேமெண்ட்ஸ் டொமைன் அனுபவம்
பணியிடம் மற்றும் சம்பளம்:
தேர்வு செய்யப்படும் நபர்கள் கோவையில் உள்ள காக்னிசண்ட் அலுவலகத்தில் பணியாற்ற வேண்டும். சம்பளம் குறித்து தற்போது தகவல் வெளியிடப்படவில்லை. இறுதி நேர்முகத் தேர்வின் போது சம்பள விவரம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்க விரும்புகிறீர்களா?
ஆன்லைனில் முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தின் கடைசி தேதியை குறிப்பிடவில்லை என்பதால் விரைவாக விண்ணப்பம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
மேலும் தகவலுக்கு:
இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் காக்னிசண்டின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும். இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்துங்கள்! இப்போதே விண்ணப்பியுங்கள்