Sunday, June 15, 2025
No menu items!
HomeCentral Gov Jobsரயில்வேயில் 4,232 பணியிடங்கள்! உங்களுக்கான பொன் வாய்ப்பு!

ரயில்வேயில் 4,232 பணியிடங்கள்! உங்களுக்கான பொன் வாய்ப்பு!

இந்திய ரயில்வே துறையில் 4,232 பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பயிற்சி அடிப்படையில் வேலை தேடும்வர்களுக்கான இந்த வாய்ப்பு, தேர்வுகள் இல்லாமல் மார்க் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. முழு தகவல்களை இங்கே காணலாம்:

பணியிடங்கள் விவரம்:

  1. ஏசி மெக்கானிக் – 143
  2. ஏர் கண்டிஷனிங் மெக்கானிக் – 32
  3. கார்பெண்டர் – 42
  4. டீசல் மெக்கானிக் – 142
  5. எலக்ட்ரானிக் மெக்கானிக் – 856
  6. இன்டஸ்ட்ரியல் எலக்ட்ரானிக்ஸ் – 10
  7. எலக்ட்ரீசியன் – 1053
  8. மின் பராமரிப்பு (எலக்ட்ரீஷியன்) – 34
  9. ரயில் விளக்கு (எலக்ட்ரீஷியன்) – 34
  10. ஃபிட்டர் – 1742
  11. மோட்டார் மெக்கானிக் வாகனம் (MMV) – 08
  12. மெஷினிஸ்ட் – 100
  13. மெக்கானிக் மெஷின் டூல் பராமரிப்பு (MMTM) – 10
  14. பெயிண்டர் – 74
  15. வெல்டர் – 713

மொத்தம் 4,232 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வி தகுதி:

  • குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அவசியம்.
  • தொழிற்பயிற்சி துறை சார்ந்த ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்ச்சியில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் அவசியம்.

வயது வரம்பு:

  • விண்ணப்பதாரர்கள் 15 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.
  • 24 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
  • வயது தளர்வு:
    • எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள்
    • ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள்

தேர்வு முறை:

  • தேர்வு இல்லை; மெரிட் அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்.
  • தேர்வு செய்யப்படுவோர் ஒராண்டு ஒப்பந்த அடிப்படையில் பயிற்சி பணியில் நியமிக்கப்படுவார்கள்.
  • பயிற்சி மையங்கள் தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அமைந்துள்ளன.

விண்ணப்ப கட்டணம்:

  • ரூ.100 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
  • பெண்கள், எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் கட்டணத்திலிருந்து விலக்கு பெறுவார்கள்.

விண்ணப்பிக்கும் தேதிகள்:

  • தொடக்க தேதி: 28.12.2024
  • கடைசி தேதி: 27.01.2025

விண்ணப்பிக்கும் முறைகள்:

தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் http://www.scr.indianrailways.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் தகவல்களுக்கு மற்றும் அறிவிப்பை வாசிக்க:
தேர்வு அறிவிப்பு

இது உங்கள் கனவு வேலை வாய்ப்பு! உங்கள் தகுதி மற்றும் ஆர்வத்தை நிரூபிக்க இன்று விண்ணப்பியுங்கள்!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments