மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக செயல்படும் பஞ்சாப் & சிந்து வங்கி தனது லோக்கல் ஆபிசர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 110 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் அருணாசலப் பிரதேசம், அசாம், குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் பணியமர்த்தப்படவுள்ளனர்.
வங்கி பற்றிய முக்கிய தகவல்
பஞ்சாப் & சிந்து வங்கி, மத்திய அரசுக்கு உட்பட்ட பொதுத்துறை வங்கி ஆகும். டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த வங்கி 1,500 கிளைகளைக் கொண்டுள்ளது. பெரும்பாலான பணியாளர்கள் IBPS மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். ஆனால், சிறப்பு அதிகாரிகள் மற்றும் சில பணியிடங்கள் நேரடியாக வங்கி மூலம் நிரப்பப்படும்.
தகுதி மற்றும் வயது வரம்பு
✅ கல்வித் தகுதி: எந்த ஒரு பாடப்பிரிவிலும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
✅ வயது வரம்பு: 20 வயது முதல் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
✅ அளிக்கப்பட்ட தளர்வுகள்:
- SC/ST விண்ணப்பதாரர்கள் – 5 ஆண்டுகள் (அதாவது 35 வயது வரை)
- OBC விண்ணப்பதாரர்கள் – 3 ஆண்டுகள் (அதாவது 33 வயது வரை)
சம்பள விவரங்கள்
வங்கி அதிகாரி பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை
📌 எழுத்துத் தேர்வு
📌 சான்றிதழ் சரிபார்ப்பு
📌 நேர்முகத் தேர்வு
📍 முக்கிய தகவல்: விண்ணப்பதாரர்கள் உள்ளூர் மொழி அறிவு கொண்டிருக்க வேண்டும். அதன்படி மெரிட் லிஸ்ட் தயாரிக்கப்படும்.
எங்கே தேர்வு நடைபெறும்?
இந்த தேர்வு நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் தேர்வு சென்னை, கோவை, நெல்லை ஆகிய இடங்களில் நடைபெறும்.
விண்ணப்ப கட்டணம்
💰 பொது/OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.850
💰 SC/ST/மாற்றுத்திறனாளிகள் – ரூ.100
📌 கட்டணம் ஆன்லைன் மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி
🔹 விண்ணப்பிக்க கடைசி நாள் – 28.02.2025
📌 முழு அறிவிப்பை காண: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல், தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குங்கள்!