இந்தியன் அஞ்சல் கட்டண வங்கி (IPPB) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 68 ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்ஸ் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.2.25 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.
பணியிட விவரம்:
- அசிஸ்டண்ட் மேனேஜர் (ஐடி): 54 இடங்கள்
- மேனேஜர் (பேமண்ட்ஸ் சிஸ்டம்): 1 இடம்
- மேனேஜர் (இன்ஃப்ராஸ்ட்ரக்சர், நெட்வொர்க் & கிளாட்): 1 இடம்
- மொத்தம்: 68 இடங்கள்
கல்வித் தகுதி:
பி.இ., பி.டெக் படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் போன்ற பாடப்பிரிவுகள் முடித்தவர்களுக்கு முன்னுரிமை.
வயது வரம்பு:
- அசிஸ்டண்ட் மேனேஜர்: 23 முதல் 35 வயது வரை
- மேனேஜர்: 26 முதல் 35 வயது வரை
சம்பளம்:
- அசிஸ்டண்ட் மேனேஜர் (ஐடி): ரூ.1,40,398
- மேனேஜர் (பேமண்ட்ஸ் சிஸ்டம்): ரூ.1,77,146
- மேனேஜர் (இன்ஃப்ராஸ்ட்ரக்சர், நெட்வொர்க் & கிளாட்): ரூ.1,77,146
- மேனேஜர் (பேமண்ட்ஸ் சிஸ்டம்): ரூ.2,25,937
விண்ணப்பிக்கும் முறை:
- இணையதளம்: www.ippbonline.com
- தொடக்கம்: 21.12.2024
- கடைசி தேதி: 10.01.2025
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
- சாதாரண விண்ணப்பதாரர்கள்: ரூ.750
- மாற்றுத்திறனாளிகள்/எஸ்சி/எஸ்டி: ரூ.150
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண: https://www.ippbonline.com/documents/20133/133019/1734713243450.pdf
இப்போது விண்ணப்பித்து உங்களது கனவு வேலைவாய்ப்பை அடையுங்கள்!